மனைவிக்கு ‘முத்தலாக்’ கூறிய பாஜக பிரமுகர்.! வழக்குப்பதிவு செய்த போலீசார்.!

Default Image

குஜராத், பாஜக பிரமுகர் சலீம் நூர் முகமது வோரா, அவர் மனைவிக்கு போனில் முத்தலாக் வழங்கியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய முறையின் படி தலாக் (விவாகரத்து) என மூன்று முறை கூறினால் கணவன் – மனைவி பிரிந்துவிட்டதாக அர்த்தம் என கூறப்பட்டு வந்தது. இந்த முத்தலாக் இஸ்லாமிய முறைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் 2017ஆம் ஆண்டே தீர்ப்பு வழங்கியுள்ளது.

  அண்மையில், குஜராத் மாநிலம் மெஹ்சானாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சலீம் நூர் முகமது வோரா மீது, அவர் தனது மனைவிக்கு போனில் முத்தலாக் வழங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு சலீம், சித்திக்பான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சித்திக்பான் அளித்த புகாரில் கூறப்பட்டது என்னவென்றால், தனது கணவர் தனக்கு முத்தலாக் கொடுத்ததாகவும், அதனை தனது போனில் பதிவு செய்து வைத்தார். மேலும் , தனது கணவர் செயலுக்கு தன் மாமியார் ஆதரிப்பதாகவும், தன்னை வீட்டை விட்டு வெளியேறும்படி கணவர் சலீம்  சித்திரவதை செய்ததாகவும் சித்திக்பான் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்