இதனால் தான் வாக்கு சதவீதம் குறைகிறது.. தேர்தல் ஆணையம் பரபரப்பு குற்றசாட்டு.! 

Supreme court of India - Election Commission of India

டெல்லி: தேர்தல் வாக்குப்பதிவு சதவீத விவரங்களை 48 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும் என்ற வழக்கு இன்று கோடைகால சிறப்பு அமர்வு முன் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மக்களவை தேர்தல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வரும் வேளையில் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நிறைவுடையும் போதும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு வரும் வாக்குப்பதிவு சதவீதம் பற்றி உச்சநீதிமன்றத்தில் ஓர் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அதில், ஒவ்வொரு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடையும் போதும், நிறைவடைந்து 48 மணிநேரத்திற்குள் வாக்குப்பதிவு சதவீதத்தை துல்லியமாக தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும், ஒவ்வொரு வாக்குசாவடியிலும் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது எனும் 17c படிவத்தை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என அந்த வழக்கில் கூறப்பட்டு இருந்தது.

இதனை அடுத்து, தேர்தல் ஆணையம் தரப்பில் கூறுகையில், தேர்தல் ஆணையம் பற்றிய தவறான குற்றசாட்டுகள் தேர்தல் சமயத்தில் கூறப்படுவதால் மக்கள் வாக்களிப்பை இந்த புகார்கள் குறைத்துவிடும். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் இம்மாதிரியான வழக்குகள் காரணமாக தான் கடந்த காலங்களை விட வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என தனது வாதத்தை தேர்தல் ஆணையம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முன்வைத்தது.

இதனை அடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் கோடைகால சிறப்பு உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, தற்போது மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி வருவதால், இந்த சமயம் இந்த வழக்கை விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து கோடை விடுமுறை முடிந்து, இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்