பஞ்சாபில் வேற்று சாதியினரை அடித்து சிறுநீர் குடிக்க வற்புறுத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் ஒரு பழைய தகராறு மனதில் வைத்து 37 வயது தலித் நபரை அடித்து சிறுநீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தியதாக நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சங்ரூர் மாவட்டத்திலிருந்து 55 கி.மீ தொலைவில் உள்ள லெஹ்ராவுக்கு அருகிலுள்ள சங்கலிவாலா கிராமத்தைச் சேர்ந்த ஜக்மெயில் சிங்.இவர் செப்டம்பர் 21-ம் தேதி அன்று ரிங்கு என்பவருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில் நவம்பர் 7-ம் தேதி இரண்டு நபர்கள் ஜக்மெயில் சிங்கை அவரது வீட்டில் இருந்து கடத்தி சென்று உள்ளனர். கடத்திவர்கள் ஜாக்மெயிலை ஒரு தூணில் கட்டி வைத்து கம்பியால் தாக்கி உள்ளனர்.
இதை தொடர்ந்து தன்னை கடத்தியவர்கள் மீது ஜக்மெயில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜாக்மெயிலை கடத்தியவர்கள் சாங்குலிவாலா கிராமத்தில் சார்ந்த ரிங்கு, அமர்ஜீத் சிங், உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அந்த நான்கு பேரையும் தேடி வருவதாகவும், இதுவரை அவர்கள் யாரையும் கைது செய்யவிலை என டிஎஸ்பி நேற்று கூறினார்.
ஜக்மெயில் இது குறித்து கூறுகையில் , என்னை கடத்தி சென்றவர்கள், குச்சி மற்றும் கம்பிகளால் அடித்தனர். நான் குடிக்க தண்ணீர் கேட்டபோது, அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக சிறுநீர் குடிக்க வைத்தார்கள் என கூறினார்.இதனால் தலித் சமூகத்தினர் அந்த நான்கு பேரை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.