ரோந்து சென்ற வாகனம் மீது கார் மோதி விபத்து..! 3 போலீசார் காயம்..!
குருகிராமில் ரோந்து சென்ற வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள எம்ஜி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வாகனம் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 3 காவலர்கள் காயமடைந்தனர். பெண்களின் அவசர அழைப்புகளுக்கு உடனே பதிலளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘துர்கா சக்தி’ ரோந்து வாகனம் எம்ஜி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அந்த வாகனத்தில் 2 கான்ஸ்டபிள் மற்றும் ஒரு பெண் தலைமைக் காவலர் இருந்துள்ளனர்.
அதிகாலை 2 மணியளவில், சிகந்தர்பூரில் இருந்து சஹாரா மால் நோக்கி ரோந்து வாகனத்தில் போலீஸ் குழு பயணித்தபோது, கார் ஒன்று வேகமாக வந்து ரோந்து வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த மோதலில் ரோந்து வாகனத்தில் பயணம் செய்த 3 போலீசார் காயமடைந்தனர். காரை ஊட்டி வந்த நபர் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து எம்ஜி ரோடு காவல் நிலையம் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் இருந்து குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த மூன்று போலீசாருக்கு உதவினர். விபத்து ஏற்படுத்தும் படி காரை ஓட்டி வந்த நபர் மீது வழக்கு பாதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நபரை விரைவில் கண்டுபிடித்து கைது செய்ய விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.