தக்காளியை கண்காணிக்கும் கேமரா! திருட்டை தடுக்க விவசாயின் யோசனை!

Cctv Camera Tomato

நாடு முழுவதும் தக்காளி விலை எகிறிக் கொண்டிருக்கிறது. இதனால், தக்காளிகள் திருடு போவதும், தக்காளி பாதுகாப்புக்கு பணியாளர்களை நியமித்த செய்திகள் கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில், தற்போது ஒரு விவசாயி தக்காளியை கண்காணிக்க தனது பண்ணையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.

காய்கறி சந்தையில் தக்காளி கிலோ 100-200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தின் ஷாபூர் பஞ்சார் என்ற இடத்தில் உள்ள ராவத் என்ற விவசாயி ஒருவர், தக்காளிகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.

Cctv Camera In Tomato Farm
Cctv Camera In Tomato Farm [file image]

சில நாட்களுக்கு முன்பு, ராவத் பண்ணையில் இருந்து 25-30 கிலோ தக்காளி திருடப்பட்டது. அதன் பிறகு, ராவத் தனது பண்ணையில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். இனி தக்காளி நஷ்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார் ராவத், அந்த தக்காளியை விற்றால், அவருக்கு ஆறு முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை கிடைக்குமாம்.

Cctv Camera In Tomato Farm
Cctv Camera In Tomato Farm [file image]

இந்நிலையில், அந்த விவசாயி தனது பயிர் பாதுகாப்புக்காக ரூ.22,000 மதிப்பிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார். மேலும், இந்த சிசிடிவி கேமரா சூரிய சக்தியில் இயங்குவதால் மின் கட்டணம் ஏதும் ஏற்படாது என்று அந்த விவசாயி கூறுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்