கல்யாணம் முடிந்த கையோடு உயிரிழந்த மணமகன்.! இசை கச்சேரியால் நேர்ந்த சோகம்.!
- தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது மணமகன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டம் போதன் நகரை சேர்ந்த 25 வயதான கணேஷ் என்பருக்கு வரவேற்பு மற்றும் திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற வரவேற்பில் இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மிகவும் சத்தமாக இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் புதுமாப்பிள்ளையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சிறுது நேரத்திற்கு பிறகு மாப்பிளை சற்று சோர்வாக காணப்பட்டார் என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கணேஷிற்கு திருமணம் நடந்துள்ளது.
திருமணம் நடந்த பிறகு சில மணி நேரங்கள் கழித்து புதுமாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் விரைந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவருடைய குடும்பத்தினர் கூறுகையில், மகிழ்ச்சிக்காகவும், உற்சாகத்திற்காவும் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி, மாப்பிளை கணேஷின் வாழ்க்கையை முடித்து வைத்து விட்டதாக உறவினர்கள் கண்ணீர்விட்டு சோகத்தை தெரிவித்துள்ளனர்.