6-ம் 7-ம் வகுப்பு படிக்கும் 59 மாணவிகளை பாலியல் சீண்டல் செய்த பெட்டிக்கடைக்காரர்!

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதிக்கு அருகே உள்ள பட்டாம்பி திருத்தலா பகுதி சேர்ந்தவர் கிருஷ்ணன்.இவர் அங்குள்ள அரசு பள்ளி அருகே ஒரு பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.
இவரது கடைக்கு வந்து பள்ளி மாணவ மாணவிகள் மிட்டாய் வாங்க வருவது வழக்கம்.இவர் மாணவிகளை கடைக்குள்ளே அழைத்து அவர்களை மிரட்டி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து இவ்வாறு சென்றுவந்துள்ளார்.குறிப்பாக கடைக்காரர் 6-ம் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை சீரழித்துள்ளார்.இவரின் இந்த செயலால் ஒரு மாணவி ஆசிரியரிடம் நடந்ததை கதறி அழுதபடி கூறியுள்ளார்.
இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.உடனே அந்த ஆசிரியர் குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்துள்ளார்.குழந்தைகள் நல அமைப்பினர் வந்து விசாரித்த போது கிருஷ்ணன் கடந்த இரண்டு வருடமாக சுமார் 59 மாணவிகளை சீண்டியுள்ளது தெரியவந்தது.
இதன் காரணமாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பெட்டிக்கடைக்காரர் கிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் படி கைது செய்து விசாரணை மேற்கொள்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025