திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையில் கொடுக்கப்பட்ட மதுபாட்டில்..! ரூ.50,000 அபராதம் விதிப்பு..!

MarriageF

புதுச்சேரியில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையில் மதுபான பாட்டில் வழங்கிய விவகாரத்தில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு. 

புதுச்சேரியில் நடைபெற்ற திருமண ரிசப்ஷன்நிகழ்ச்சி  ஒன்றில் நூதன முறையில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது அங்கு வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில், புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் தேங்காய், பழங்களுடன் மது பாட்டிலும் அதனுடன் பிஸ்கட் பாக்கெட் வைத்து கொடுத்துள்ளனர். இது திருமணத்திற்கு வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று இந்த நிகழ்விற்கு வந்த உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையில் மதுபான பாட்டில் வழங்கிய விவகாரத்தில், புதுச்சேரி கலால் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி மதுபானம் வழங்கிய நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்