முன்னாள் எம்.எல்.ஏ வீட்டின் அருகே வெடிகுண்டு..! தேடுதல் தீவிரம்..!
ஜம்மு காஷ்மீர் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சவுத்ரி முகமது அக்ரமின் வீட்டின் அருகே கையெறி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு நடைபெறுவதற்கு ஒருவாரம் முன்னதாக சூரன்கோட் தாலுகாவின் லசானா கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் நிகழ்ந்தது.
அந்த சம்பவத்தில் அவரது வீட்டின் பல அறைகள் சேதமடைந்தன. குடும்பத்தினர் இந்த விபத்தில் இருந்து தப்பினர். வெடிகுண்டு இருப்பதாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும் இராணுவத்தினரும் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
அக்ரமின் மகனான ஷோகட் கூரியதாவது :
வீட்டிற்கு அருகே கையெறி குண்டு இருப்பதாக வீட்டில் இருந்து அழைப்பு வந்தபோது நான் இரங்கல் கூட்டத்திற்கு சென்றிருந்தேன் என்று கூறினார். “எங்களுக்கு இது ஏன் நடக்கிறது? இதுபோன்ற சம்பவம் நடப்பது இரண்டாவது முறையாகும்” என்றும் “எங்கள் வீட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, வீட்டை சுற்றி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளனஎன்று ஷோகட் மேலும் கூறினார்.