கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ ஒருவர் வாக்காளருக்கு 6 ஆயிரம் ரூபாய் தருவோம். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைப்போம் என பேசியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தற்போதே கர்நாடக தேர்தல் களம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. பிரதான கட்சிகள் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் களமிறங்க ஆரம்பித்து விட்டனர்.
அதில் தற்போது பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியது தான் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் வேறு யாருமல்ல காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்று அங்கு எடியூரப்பா தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் தற்போதைய எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோலி பேசியுள்ளார்.
அவர் அண்மையில் ஒரு நிகழ்வில் பேசுகையில், காங்கிரஸார் பரிசு பொருட்களை மக்களுக்கு வழங்குவதை நாங்கள் பார்த்துள்ளோம். அந்த குக்கர் போன்ற பரிசுப்பொருட்களின் தொகை 3000 ரூபாயை தாண்டாது. நாங்கள் (பாஜக) ஒரு வாக்காளருக்கு 6000 ரூபாய் தருவோம். கொடுக்கவில்லை என்றால் எங்கள் வாக்காளருக்கு வாக்களிக்க தேவையில்லை. என குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ எந்த காரணம் கொண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட கூடாது. பெரும்மாபான்மை இல்லாமல் சட்டசபை கூட்டணியுடன் அமைந்தாலும், சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியாவது ஆட்சி அமைத்து விடலாம் . ‘ எனவும் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் ஜார்கிஹோலி பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…