பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சிலரை வாங்கி ஆட்சி அமைத்து விடலாம்.! பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு.!

Default Image

கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ ஒருவர் வாக்காளருக்கு 6 ஆயிரம் ரூபாய் தருவோம். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைப்போம் என பேசியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தற்போதே கர்நாடக தேர்தல் களம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. பிரதான கட்சிகள் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் களமிறங்க ஆரம்பித்து விட்டனர்.

அதில் தற்போது பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியது தான் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் வேறு யாருமல்ல காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்று அங்கு எடியூரப்பா தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் தற்போதைய எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோலி பேசியுள்ளார்.

அவர் அண்மையில் ஒரு நிகழ்வில் பேசுகையில், காங்கிரஸார் பரிசு பொருட்களை மக்களுக்கு வழங்குவதை நாங்கள் பார்த்துள்ளோம். அந்த குக்கர் போன்ற பரிசுப்பொருட்களின் தொகை 3000 ரூபாயை தாண்டாது.  நாங்கள் (பாஜக) ஒரு வாக்காளருக்கு 6000 ரூபாய் தருவோம். கொடுக்கவில்லை என்றால் எங்கள் வாக்காளருக்கு வாக்களிக்க தேவையில்லை. என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், ‘ எந்த காரணம் கொண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட கூடாது. பெரும்மாபான்மை இல்லாமல் சட்டசபை கூட்டணியுடன் அமைந்தாலும், சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியாவது ஆட்சி அமைத்து விடலாம் . ‘ எனவும் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் ஜார்கிஹோலி பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்