இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு.! அபராதம் விதித்து கண்டனம் தெரிவித்த நீதிபதி.!

Supreme court of india

இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு. 

கல்வி, அரசு வேலைவாய்ப்பு, உதவித்தொகை போன்றவற்றில் இடஒதுக்கீடு என்பது முக்கிய பங்காற்றுகிறது. அதன் மூலம் பலரும் பயன்பெற்று வருகின்றனர். இந்த இடஒதுக்கீட்டை படிப்படியாக குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

சாதி ரீதியிலான இடஒதுக்கீட்டை படிப்படியாக குறைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பொதுநல மனு மீதான வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி சந்திரஷூட் அமர்வு முன்பு வருகையில், இந்த வழக்கானது நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தும் நோக்கில் தொடரப்பட்டு உள்ளது. என நீதிபதி தனது கண்டனத்தை பதிவு செய்து, பொதுநல மனுவை தாக்கல் செய்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி சந்திரஷூட் உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்