Ballistic Missile Defence System [Image source : GETTY IMAGES]
ஒடிசா: 5000 கிமீ தூரம் வரையில் துல்லியமாக இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ரக ஏவுகணை நேற்று ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
நேற்று (ஜூலை 24) ஒடிசாவில் பாலிஸ்டிக் ஏவுகணை 2ஆம் கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த வெற்றிகரமான ஏவுகணை சோதனைக்காக DRDOவை வாழ்த்தியுள்ளார். இந்த சோதனையானது நமது பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு திறனை மீண்டும் நிரூபித்துள்ளது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
5000 கிமீ தூரம் வரையில் இலக்கை துல்லியமாக நிர்ணயித்து தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையானது நேற்று (ஜூலை 24) ஒடிசா மாநிலம் சந்திப்பூர் LC-IV மூலம் மாலை 4.20 மணிக்கு ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. நீண்ட தூரம் செயல்படும் சென்சார்கள், குறைந்த நேரத்தில் தொடர்புகொள்ளும் அளவுக்கு கம்யூனிகேஷன் சிஸ்டம், வேறு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் ஆகிய வசதிகளை கொண்ட முழுமையான நெட்வொர்க்-மையப்படுத்தப்பட்ட போர் ஆயுதமாக உள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் பாலிஸ்டிக் ஏவுகணை பற்றி தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணையை நிலத்திலும், நீரிலும் நிலைநிறுத்தி இலக்குகளை தாக்கலாம் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…