சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுமி…புதுச்சேரியில் பரபரப்பு.!
Puducherry: புதுச்சேரியில் கடந்த 2ஆம் தேதி மாயமான 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோலை நகரைச் சேர்ந்த அந்த சிறுமி மார்ச் 2-ஆம் தேதி மாயமானதாக அவரது பெற்றோர் புகார் அளித்திருந்த நிலையில், 3 நாட்கள் கழித்து அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
READ MORE – எம்ஜிஆர் – ஜெயலலிதா படத்தை வைத்து தேர்தல் பரப்புரை செய்த பாஜக பிரமுகர்கள் சஸ்பெண்ட்
காணாமல் போன அந்த சிறுமியைக் கண்டுபிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, முத்தியால்பேட்டையில் வசிக்கும் மக்கள் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பேசுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் முறையான விளக்கம் அளித்தனர். இதனையடுத்து, அப்புகுதியை சேர்ந்த சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர், குழந்தையைக் கண்டுபிடிக்க சிறப்புக் குழுவை அமைக்குமாறு வலியுறுத்திருந்தார்.
READ MORE – நான் என்ன செய்கிறேன்.. அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி.
இந்நிலையில், தங்களது குழந்தையை காணும் என சிறுமியின் பெற்றோர் கடந்த சனிக்கிழமை மாலை புகார் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
READ MORE – அதிர்ச்சி….ஹோட்டலில் ‘Mouth Freshener’ சாப்பிட்ட 5 இரத்த வாந்தி.!
இதையடுத்து, தீவிர தேடுதலில் ஈடுபட்ட போலீசார், இன்று சோலை நகர் வாய்க்காலில் இருந்து சிறுமியை சடலமாக மீட்டனர். தற்போது, அந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குழந்தை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சந்தேகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக சோலை நகர் மக்கள் சோகத்தில் உள்ளனர்.