மருத்துவரை கட்டியணைக்கும் கொரோனாவில் இருந்து மீண்ட 75 வயது பெண்மணி…!
மருத்துவரை கட்டியணைக்கும் கொரோனாவில் இருந்து மீண்ட 75 வயது பெண்மணி.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுபவர்களை மீட்டெடுக்க, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கொல்கத்தா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டான்மோய் டே என்பவர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், 75 வயதான பெண்மணி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 10 நாட்களுக்கு பின் குணமடைந்து வீடு திரும்புகிறார். அப்போது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரை கட்டியணைக்கிறார். அந்த மருத்துவரை கட்டியணைத்து, அன்பையும், ஆசீர்வாதத்தையும் பொழிகிறார். பெண்மணி இந்த செயல் பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.