மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் லோகேஷ் அஹிர்வார் என்ற 7 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது, லேட்டரி தாலுகாவிற்கு உட்பட்ட கெர்கேடி பத்தர் கிராமத்தில் தோண்டப்பட்டிருந்த 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை கவனித்த கிராம மக்கள் மீட்புக் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புத் துறையினர் ஆழ்துளை கிணற்றின் 43 அடி ஆழத்தில் மாட்டிக் கொண்ட சிறுவனை பாதுகாப்பாக காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்ட ஜேசிபி இயந்திரம் மூலம் 51 அடி ஆழத்திற்கு இணையான குழி தோண்டப்பட்டு, போர்வெல் இயந்திரம் மூலம் சுரங்கப்பாதை ஒன்றைத் தோண்டினர்.
மாநில பேரிடர் மீட்பு நிதியத்தின் (SDRF) 3 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) ஒரு குழுவும் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சிறுவனின் உடல்நிலையை கண்காணிக்க கேமராவும், சிறுவனுக்கு உணவு ஏதும் வழங்க முடியாத நிலையில் ஆக்சிஜன் சப்ளை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 24 மணிநேரம் நீடித்த மீட்புப் பணிக்கு பிறகு மீட்புக் குழுவினர் சிறுவனை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் அங்கு மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து விதிஷா மாவட்ட ஆட்சியர் உம்சங்கர் பார்கவ், ” 24 மணி நேரம் நீடித்த மீட்பு பணியில் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. அவரது இறப்பு அனைவர்க்கும் வருத்தமளிக்கிறது என்றும் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளதாகவும்” தெரிவித்தார். மாவட்டத்தில் திறந்து கிடக்கும் அனைத்து ஆழ்துளை கிணறுகளும் 7 நாட்களுக்குள் மூடப்படும் என ஆட்சியர் மேலும் தெரிவித்தார்.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…