ஆற்றில் குதித்த 60 வயது பூசாரி இரண்டு நாள்கள் கழிந்து வீடு திரும்பினர் !
கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள அனைத்து நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி அணைகளில் நிரம்பி ஓடுகிறது.
இந்நிலையில் ஆற்றில் ஓடும் தண்ணீரில் பூசாரி ஒருவர் குதித்து இரண்டு நாள்கள் கழிந்து உயிருடன் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். வெங்கடேஷ்(60) என்ற பூசாரி நபர் கபிலா ஆற்றில் குதித்து உள்ளார். அவர் ஆற்றில் குதிக்கும் போது அங்கு இருந்த சிலர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.
ஆற்றில் ஓடும் தண்ணீரின் வேகத்திற்கு கண்டிப்பாக வெங்கடேஷ் இறந்து இருப்பார் என பலர் கூறினார். ஆனால் அவர்களின் முகத்தில் கறி பூசுவதுபோல இரண்டு நாள்கள் கழிந்து மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.
வீடு வந்த வெங்கடேஷ் கூறுகையில் , ஆற்றில் குதித்ததில் சோர்வடைந்த நான் ஹெஜ்ஜிஜ் பாலத்தின் கீழ் ஓய்வு எடுத்ததாக கூறினார்.இது குறித்து வெங்கடேஷ் வீடு திரும்பினார் என அவர் குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் அவர் இரண்டு நாள்கள் எப்படி சாப்பிடாமல் இருந்தார் என்பதை அவர்கள் கூறவில்லை என காவல் அதிகாரி கூறினார்.அனைவரும் ஆச்சரியப்பட்டாலும் வெங்கடேஷ் சகோதரி மனசுல ஆச்சரியப்படவில்லை. இதுகுறித்து மனசுல கூறுகையில் , அவர் ஆற்றில் குதித்து மீண்டும் வீட்டுக்கு வருவதை 25 வருடங்களாக செய்து வருகிறார் என கூறினார்.