டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள 1000 கிமீ சைக்கிளில் வந்த 60 வயது முதியவர்!

Default Image

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள பீஹாரிலிருந்து 1000 கிமீ சைக்கிளில் தேசியக்கொடியுடன் வந்தடைந்த 60 வயது முதியவர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதியிலிருந்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களின் விவாசிகள் இணைந்து டெல்லியிலுள்ள திக்ரி எனும் இடத்தில போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதிஅரவாக தமிழகத்திலும் பல அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் தொடர்ச்சியாக நடத்தப்படும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வெவ்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கூட்டம் கூட்டமாக தினமும் வந்துகொண்டு தான் உள்ளனர்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் எனும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய சத்யதேவ் மன்ஜி எனும் 60 வயது முதியவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள பீகாரிலிருந்து 1000 கிமீ சைக்கிளிலேயே பயணம் செய்து தற்பொழுது டெல்லியை அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி நடத்தப்படும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தான் கடந்த 11 நாட்கள் சைக்கிளிலேயே பயணம் செய்து வந்துள்ளதாகவும், போராட்டம் முடியும் வரை தான் இங்கே தான் இருக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்