6 வயது சிறுவன் கோழிக்குஞ்சுக்கு சிகிச்சை அளிக்க சொல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மிசோரம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாநிலம் ஆகும்.6 வயது சிறுவன் டெரிக் சி லால் என்பவன் மிசோரம் மாநிலத்தின் சாய்ராங் பகுதியைச் சேர்ந்தவன்.
இந்த சிறுவன் அவனது சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கோழிக்குஞ்சு ஓன்று குறுக்கே வந்தது.அதனை பார்க்காத சிறுவன் கோழிக்குஞ்சு மீது சைக்கிளை ஏற்றியுள்ளான்.உடனே அடிபட்ட கோழிக்குஞ்சை பார்த்து சிறுவன், உடனடியாக அதனை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றான்.கோழிக்குஞ்சை கண்ட அவனது அப்பா,அது இறந்து விட்டது என்று மகனிடம் கூறினால் வருத்தப்படுவன் என நினைத்த அவர் அவனிடம் சொல்லவில்லை.
பின்னர் இதை அறியாத சிறுவன் அந்த கோழிகுஞ்சை எடுத்துக்கொண்டு 10 ரூபாயை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.அப்போது அந்த மருத்துவமனையில் உள்ள நர்ஸிடம் சென்றான்.அங்கு சென்று 10 ரூபாயை வைத்துக்கொண்டு கோழிகுஞ்சுக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறியுள்ளான்.ஒரு கையில் கோழிக்குஞ்சு மறுகையில் 10 ரூபாயுடன் இருந்த அந்த சிறுவனை நர்ஸ் புகைப்படம் எடுத்தார்.மேலும் அவனின் மனித நேயம் கண்டு அவர் வியந்தார்.இதன் பின்னர் அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.அது தற்போது வைரலாகி வருகிறது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…