கனமழை கோரம்: பெங்களூரில் 6 மாடி கட்டிடம் இடிந்து விபத்து.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

இந்த கட்டிடத்தில் 17 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சரியான எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

Bengaluru Building Collapse

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. கார்கள், பைக்குகள், பேருந்துகள் சாலைகளில் மிதக்கின்றன. இதனால் பெங்களூருவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிழக்கு பெங்களூரு பாபுசபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடிக் கட்டடம், கனமழையால் இடிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 17 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சரியான எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

கட்டட இடிபாடுகளில் 8 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. சுமார் 14 மணி நேரத்திற்கு மேலாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மொத்த இறப்பு எண்ணிக்கை 5. மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 அவர்களில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதில், அயாஸ் என அடையாளம் காணப்பட்ட ஒருவர், கிட்டத்தட்ட 16 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். உயிரிழந்தவர்களில் 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்