பெங்களூருவில் ஆபாசப் படங்களுக்கு அடிமையான 40 வயதான ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது மனைவி ஆபாச படத்தில் நடித்ததாக நினைத்துக் கொண்டு,குழந்தைகள் முன்னிலையில் அவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான பாஷா மற்றும் முனீபா தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில்,குற்றம் சாட்டப்பட்ட ஜஹீர் பாஷா,இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு ஆபாசப் படத்தைப் பார்த்து, அதில் அவரது மனைவி முபீனா (35) இருந்ததாக சந்தேகிக்கத் தொடங்கினார்.
மனைவியின் மீது நம்பிக்கை இல்லாத அவர் தனது மனைவியை துன்புறுத்தத் தொடங்கினார்.இந்த நிலையில்,கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி தங்கள் குழந்தைகள் முன்னிலையிலேயே பாஷா தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
இதற்கிடையில்,இரண்டு மாதங்களுக்கு முன்,பாஷா,குடும்ப விழா ஒன்றில் முனீபாவை தாக்கி,அடித்ததாக கூறப்படுகிறது.மேலும்,சுமார் 20 நாட்களுக்கு முன்பு,பாஷா தனது மனைவியை மிகவும் மோசமாகத் தாக்கியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சூழலில் தனது மனைவியை ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,உயிரிழந்த முனீபாவின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பாஷாவை கைது செய்த காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…