200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவன்!
200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் மஹாராஷ்டிரா மீட்புக்குழு ராணுவம்.
இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழக்கக்கூடிய சிறுவர்களின் மரணம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. மிக பெரிய தாக்கத்தை தந்த சுஜித்தின் மரணத்திற்கு பின்பும்கூட பல இடங்களில் கவனக்குறைவால் குழந்தைகள் விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்பொழுது மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நிவாரி எனும் மாவட்டத்தில் பர்கோ பூஜோர்க் எனும் கிராமத்தில் வாசிக்க கூடிய ஹரிகிருஷ்ணன் எனும் விவசாயி தனது பண்ணையில் 200 அடி நீளமுள்ள ஆழ்துளை கிணற்றை வைத்துள்ளார்.
இந்த துளை ஒரு இரும்பு சட்டி கொண்டு மூடப்பட்ட நிலையில் தான் இருந்துள்ளது. ஆனால், அந்த வயலில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயதுடைய ஹரிகிருஷ்ணனின் மகன் ப்ரஹ்லாத் அந்த இரும்பு சட்டியை விளையாட்டாக அகற்றியுள்ளார். பின் அதில் தடுமாறி உள்ளே விழுந்துள்ளார். இது தொடர்பாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது, காவல்துறையினர் அங்கு குவிந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய நிவாரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வாகினி சிங், மீட்பு பணிக்காக இராணுவ வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.