ஊரடங்கு நேரத்தில் வேலையில்லாமல் வறுமையில் இருந்ததால், 38 வயது நபர் தனது மகன் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஒருபுறம் கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்தாலும் மக்கள் முறையாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும்கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து மஹாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு நாட்களில் பலர் வேலை இல்லாமல் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், 58 வயதுடைய ஷிண்டே எனும் நபர் இந்த நேரத்தில் வேலை இல்லாததால் மிகவும் வறுமையில் உள்ளார். எனவே தனது 28 வயது மனைவி பிரக்யா மற்றும் 14 மாதமே ஆன ஆண் குழந்தை இருவரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…