ஹரியானா மாநிலம் கடந்த மார்ச் மாதம் துப்பாக்கி முனையில் 30 வயது பெண் மற்றும் அவரது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபரை குறுகிராமம் போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றச்சாட்டப்பட்டவர் ஹரிஷ் என்று அடையலாம் காணப்பட்டார். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் கணவரின் நண்பர், இந்த சம்பவத்தையும் பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தற்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆயுத சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் போண்ட்ஸி என்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் தனது 14 வயது மகள் மற்றும் 9 வயது மகனுடன் அங்குள்ள காரி கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் அதே கிராமத்தில் வசிப்பவர் என்றும், கணவரின் நண்பராக இருப்பதால் கணவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களது வீட்டிற்கு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றசாட்டியுள்ளார். அவரது புகாரில், என் கணவர் நலமாக இல்லை. எனவே, எனது சகோதரர் அவரை ஜிந்திற்கு என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றார். மார்ச் 19 அன்று ஹரிஷ் என் வீட்டிற்கு வந்தார். அப்போது, எனக்கு உடல்நிலை சரியில்லாததால், அவர் ஒரு மயக்க மருந்து கொடுத்தார். மருந்து உட்கொண்ட பிறகு நான் மயக்கமடைந்தேன்.
பின்னர் ஹரிஷ் என்னை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த முழு சம்பவத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியிட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மிரட்டியுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் தனது வீட்டிற்குச் சென்று தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது போலவே தனது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கணவர் ஜூன் 28 அன்று இறந்ததை அடுத்து அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் விசாரணையில், பாதிக்கப்பட்ட இருவரின் மருத்துவ பரிசோதனையும் பாலியல் பலாத்காரத்தை உறுதிப்படுத்தியது. இதனிடையே, குற்றவாளி ஏற்கனவே, ஒரு ஆயுதச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், கற்பழிப்பு வழக்கில் அவரது காவலை விரைவில் நீதிமன்றத்தில் இருந்து எடுப்போம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. செக்டர் -10 ஏ காவல் நிலையத்தில் குற்றம் சட்டப்பட்டவர்க்கு எதிராக போக்ஸோ சட்டம் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…