200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன்.! சடலமாக மீட்பு .!

Published by
Ragi

200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவனை 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்டெடுத்தனர் .

மத்திய பிரதேசம் மாநிலம் நிவாரி மாவட்டத்தின் பிரத்விபூர் பகுதியில் உள்ள சேதுபுராபரா கிராமத்தை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் . இவரது 3 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது அங்கு மூடாமல் இருந்த 200 அடியுள்ள ஆழ்துளை கிணற்றில் கடந்த 4-ஆம் தேதி தவறி விழுந்துள்ளார் .  அதனையடுத்து குழந்தையின் அழுகை குரலை கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு படைக்கும் ,காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர் .

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணுவ வீரர்கள் மற்றும் மாநில மீட்பு குழுவினர் குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர் . இரவு பகல் என்று பாராமல் ராணுவ வீரர்கள் குழந்தையை மீட்க போராடி வந்தனர் . 3 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை 3 மணியளவில் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றிலிருத்து சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர் .கிணற்றில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

யார் அந்த தியாகி? “நொந்து போய் நூடுல்ஸ் ஆகிய அதிமுகவினர்” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்! 

யார் அந்த தியாகி? “நொந்து போய் நூடுல்ஸ் ஆகிய அதிமுகவினர்” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

2 minutes ago

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…

1 hour ago

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!

திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

2 hours ago

சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…

3 hours ago

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

4 hours ago