200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன்.! சடலமாக மீட்பு .!

200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவனை 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்டெடுத்தனர் .
மத்திய பிரதேசம் மாநிலம் நிவாரி மாவட்டத்தின் பிரத்விபூர் பகுதியில் உள்ள சேதுபுராபரா கிராமத்தை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் . இவரது 3 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது அங்கு மூடாமல் இருந்த 200 அடியுள்ள ஆழ்துளை கிணற்றில் கடந்த 4-ஆம் தேதி தவறி விழுந்துள்ளார் . அதனையடுத்து குழந்தையின் அழுகை குரலை கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு படைக்கும் ,காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர் .
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணுவ வீரர்கள் மற்றும் மாநில மீட்பு குழுவினர் குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர் . இரவு பகல் என்று பாராமல் ராணுவ வீரர்கள் குழந்தையை மீட்க போராடி வந்தனர் . 3 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை 3 மணியளவில் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றிலிருத்து சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர் .கிணற்றில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.