22 வயதான வங்கதேச பெண் ஒருவர் இந்தியாவை சேர்ந்த தனது காதலனை திருமணம் செய்வதற்காக எல்லையை காடு மற்றும் ஆற்றை கடந்து வந்து திருமணம் செய்துள்ளார்.
கிருஷ்ணா மண்டல் என்ற வங்காளதேச பெண், அபிக் மண்டலுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்பு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.கிருஷ்ணாவிடம் பாஸ்போர்ட் இல்லாததால், சட்டவிரோதமாக எல்லையை கடக்க முடிவு செய்துள்ளார்.
கிருஷ்ணா முதன்முதலில் ராயல் பெங்கால் புலிகளுக்கு பெயர் பெற்ற சுந்தரவனப் பகுதிக்குள் நுழைந்துள்ளார்.பின்னர் அங்கிருந்து ஆற்றில் சுமார் ஒரு மணி நேரம் நீந்தி தனது காதலனை சந்தித்துள்ளார் இந்த துணிச்சல்மிக்க பெண்.
மூன்று நாட்களுக்கு முன்பு, கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில், கிருஷ்ணா அபிக்கை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததற்காக அவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணா பங்களாதேஷ் உயர்அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டின் தொடக்கத்தில்,இந்தியாவில் சாக்லேட் வாங்குவதற்காக வங்கதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் எல்லையை ஆற்றில் நீந்தி கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…