மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்….!!
சிங்காரூலியின் கெர்ஹார் கிராமத்தில் 2 வயது சிறுவன் 70-அடி ஆழத்தில் சிக்கியதால் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது சிங்காரூலி.இதன் அருகே இருக்கின்றது கெர்ஹார் கிராமம் .இந்த கிராமத்தில் இன்று 70 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு இருந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
70 அடி ஆழம் கொண்ட அந்த குழியில் சிக்கி கொண்ட அந்த சிறுவனை மீட்கும் பனி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.தொடர்ந்து மீட்பு பனி வீரர்கள் 2 வயது சிறுவனை வெளியே கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றின் குழியில் சிக்கியுள்ளதால் அந்த கிராமமே சோகத்தில் இருந்து வருகின்றது.