Categories: இந்தியா

7-வது மாடியில் இருந்து விழுந்த 2 வயது சிறுவன்! நெஞ்சை உலுக்கும் வீடியோ!

Published by
பால முருகன்

சூரத் : பாலில் உள்ள ஸ்ரீபாத் செலிப்ரேஷன்ஸ் பகுதியில்  7-வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து இரண்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சூரத்தின் பாலில் பகுதியில் பெரிய கட்டடம்  ஒன்று இருக்கிறது. இந்த கட்டடத்தின் 7-வது மாடியில் இருந்து இரண்டு வயது சிறுவன் விளையாடி கொண்டு இருந்த போது  கீழே விழுந்து உயிரிழந்தான். உயிரிழந்த அந்த சிறுவன் பவ்யா கல்சாரியா என்று தெரிய வந்துள்ளது.

குழந்தையின் தாய் மற்றும் அத்தை வீட்டைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, 7-வது மாடியில் பவ்யா கல்சாரியா விளையாடி கொண்டு இருந்த நிலையில், இரும்புக் குழாய் வழியாக  கிரில்லில் உட்கார முயன்றார். அப்போது, திடீரென சமநிலை இழந்து கீழே விழுந்தார். கிரில் சற்று இடைவெளியாக இருந்த காரணத்தால் குழந்தையின் உடல் சுலபமாக நுழைந்துவிட்டது.

கீழே விழுந்த தகவலை அறிந்த  குடும்பத்தினர் பவ்யா கல்சாரியாவை மருத்துவனைக்கு கொண்டு சென்ற நிலையில், உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவத்திற்குப் பிறகு,  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் கிரில்களின் சரியான மறுவடிவமைப்பு உறுதி செய்யுமாறு சங்கத் தலைவருக்கு நோட்டீஸ் வழங்கினர்.

7-வது மாடியில் இருந்து குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பதபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

காயமடைந்த விராட் கோலி எப்படி இருக்கிறார்? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…

5 minutes ago

வக்ஃப் திருத்த மசோதா: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…

47 minutes ago

எந்தெந்த பொருட்கள் வரிகளால் பாதிக்கப்படும்? அமெரிக்கா விதித்துள்ள வரிகள் விவரம்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…

1 hour ago

LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!

சென்னை :  கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…

2 hours ago

ரொம்ப மகிழ்ச்சியா இங்க தான் இருக்கேன்…நேரலையில் வந்த நித்யானந்தா! வீடியோ இதோ..

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

3 hours ago

பிரதமர் மோடி நண்பர் தான் ஆனா இந்தியா 26 வரி கொடுக்கணும்! டிரம்ப் அதிரடி உத்தரவு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…

4 hours ago