மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது 19 ஆவது பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் செல்கையில், அந்தப் பெண்ணின் நண்பர்களாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த அந்த பெண் தனது 19 வது பிறந்தநாளை ஜூலை 7ஆம் தேதி கொண்டாடியுள்ளார்.
அப்போது சம்பூரில் உள்ள அந்தப் பெண்ணின் நண்பர்கள் அந்தப் பெண்ணை பிறந்தநாள் கொண்டாட அழைத்துள்ளனர். இதனால் அந்த இளம் பெண்ணும் சாம்பூருக்கு சென்றுள்ளார். அங்கு பிறந்தநாள் கொண்டாடிய அந்த நான்கு நண்பர்கள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனை அந்த பெண் வீட்டிற்கு தெரிவிக்காமல் இருந்துள்ளார். பிறகு அந்தப் பெண்ணுக்கு வயிற்று வலி அதிகமாக உள்ளது. உடனே அப்பெண்ணின் பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு, மருத்துவர்கள் இந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதா பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். உடனே, அந்தப் பெண்ணிடம் பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். அந்தப் பெண் பின்னர் நடந்ததை கூறியுள்ளார்.
உடனே பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறபடுகிறது. அதே வேளையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் உடல்நலக்குறைவு அதிகமானதால் இறந்துவிட்டார். ஆனால் இன்னும் அந்த பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர்களை போலீசார் பிடிக்க வில்லை. இதனை கண்டித்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அந்தப் பெண்ணின் உறவினர்கள் போராட்டம் செய்து உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கடந்த ஜனவரி 11-ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய…
சென்னை : வெளிநாடு வேலைவாய்ப்பு என ஒரு சில தனியார் நிறுவனங்களில் அதிக பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் இங்கு…
ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
சென்னை : இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிக்கும் ‘SK 25'…
குஜராத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு…