தந்தை முன்னே நடந்த கோர சம்பவம்.. 17 வயது பெண் மீது தீவைத்த காதலன்..!
கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின். இவர் அங்குள்ள காக்க நாடு பகுதியை சேர்ந்த 17 வயதுள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர் அந்தப் பெண்ணிடம் பலமுறை தனது காதலைத் தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் காதலுக்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு நிதின் சென்றார்.
வீட்டில் இருந்து வெளியே வந்த அவரின் தந்தையிடம் அப்பெண்ணைப் பார்க்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து வெளியே வந்த அந்தப் பெண் மீது அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி அப்பெண் மீது தீ வைத்துள்ளார். மேலும், அவர் உடல் மீது அவரே பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தில், அவரது மகளை காப்பாற்ற சென்ற தந்தை, நெருப்பில் சிக்கி படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.