8 நாட்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்து உலக சாதனை படைத்த 17வயது சிறுவன்.!
8 நாட்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3,600 கி.மீ பயணம் செய்து 17 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
மகாராஷ்டிராவின் நாசிக் நகரை சேர்ந்தவர் 17 வயது சிறுவனான ஓம் மகாஜன் .அவருக்கு சைக்கிள் ஓட்டுவது மிகவும் பிடிக்குமாம் .தற்போது அதன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார்.அதாவது ஓம் மகாஜன் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சுமார் 3,600 கி.மீ சைக்கிளில் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.அதாவது 8 நாட்கள் ,ஏழு மணி மற்றும் 38 நிமிடங்களில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரியை அடைந்து லெப்டினன்ட் கேணல் பாரத் பன்னுவின் சாதனையை முறியடித்துள்ளார் .
இதன் மூலம் ஓம் மகாஜன் இந்தியாவில் அதிவேகமாக சைக்கிள் பயணம் மேற்கொண்டவர் என்ற உலக சாதனையை படைத்து பாராட்டுக்குரியவர் ஆகியுள்ளார் .இது தொடர்பாக ஓம் மகாஜன் கூறியதாவது,தனது கனவு ‘Race Across America’ போட்டியில் கலந்து கொள்வது.அதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறினார் . காஷ்மீரில் கடும் குளிருக்கு இடையேயான இரவில் தனது பயணத்தை தொடங்கி ,வெயில் ,மழை ஆகியவற்றிற்கு இடையிலும் பல மாநிலங்களை கடந்து தனது இறுதி இலக்கை அடைந்ததாகவும் , பயணத்தின் போது தனக்கு சில மணிநேர தூக்கம் மட்டுமே கிடைத்ததாகவும் கூறினார்.