லாட்டரி சீட்டு மூலம் 145 -வது கோடிஸ்வரரான விவசாயி !

Default Image

தெலுங்கானாவில் நிஜாமாபாத் மாவட்டம் ஜாக்ரன் கிராமத்தை சேர்ந்தவர் விலாஸ் விக்கலா இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு இமானி , மானஸ்வினி  என்ற 2 மகள்கள் உள்ளனர். இவருக்கு விவசாயத்தில் போதிய வருவாய் இல்லாததால் துபாயில்  இரண்டு முறை டிரைவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 45 நாள்களுக்கு முன் மீண்டும் துபாய் சென்று உள்ளார். இவர் அங்கு லாட்டரி சீட் வாங்குவது வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் தன்னுடைய வேலையில் மனநிறைவு  ஏற்படாததால் ரூ .22  ஆயிரத்திற்கு லாட்டரி டிக்கெட்டை வாங்கி கொண்டு மீண்டும் இரண்டு வாரங்களுக்கு முன் தெலுங்கானாவிற்கு திரும்பியுள்ளார்.

பிறகு தனது மனைவிடம் ரூ .20 ஆயிரத்தை வாங்கி துபாயில் இருக்கும் தனது நண்பர் ரவியிடம் கொடுத்து தனது பெயரில் லாட்டரி சீட்டு வாங்க சொன்னார். ரவியும் 3 லாட்டரி சீட்டு வாங்கி அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் விலாஸ் வாங்கிய  ராக்கெட் லாட்டரி டிக்கெட்டுக்கு  4.8 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.28 கோடி பரிசுத் தொகை விழுந்திருப்பதாக அந்த  லாட்டரி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த லாட்டரி நிறுவனம் விலாஸ்விற்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். 1999-ம் ஆண்டு முதல் மில்லியன், மில்லினியர் என்ற பெயரில்  துபாய் சார்ந்த லாட்டரி நிறுவனத்தின் மூலமாக இதுவரை 144 இந்தியர்கள் கோடிஸ்வரர்களாக  மாறி  உள்ளனர். தற்போது 145- வது இந்தியராக விலாஸ் பரிசுத்தொகை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்