சிறுமிக்கு தேவைப்பட்ட  A+இரத்தம் பணியில் இருந்தும் ஓடி வந்து கொடுத்த காவலர் !

Default Image

14 வயது சிறுமியின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரத்தம் வழங்கிய காவலர்.

14 வயது சிறுமியின் இருதய அறுவை சிகிச்சையில் மும்பையைச் சேர்ந்த காவலர் ஆகாஷ் இரத்தம் கொடுத்துள்ளார். அவசர தேவை என்பதால் பணியில் இருந்த ஆகாஷ் மருத்துவமனைக்கு விரைந்து வந்து ரத்தம் கொடுத்துள்ளார். நிசார்கா புயல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரையை கடந்ததால் மும்பையின் சில பகுதிகளில் சாலை சேதமடைந்தது. இதனால் ரத்த தானம் கொடுப்பவர்களால் வரமுடியாத காரணத்தினால் காவலர் ஆகாஷ் இரத்தம் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது .

இது குறித்து மும்பை காவல்துறை உயர் அதிகாரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 8 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்காக A+ வகை ரத்தத்தை அவசர தேவைக்கு தானம் செய்து உதவியுள்ளார். இவரது இரத்த வகையும்  A+ என்றும் இவரது அர்ப்பணிப்பும் A+” என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்