ஹரியானாவில் விளையாட்டு போட்டிக்கு வந்த 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.! வீடியோ எடுத்து மிரட்டிய 3 சிறுவர்கள்.!
ஹரியானா குருகிராமில் 14 வயது சிறுமியை 3 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் எனவும் , அதனை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகள் 18வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பர். அதுவே, கொடுமையான விஷயம். ஆனால், தற்போது பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் ஈடுபவது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமை :
ஹரியானா மாநிலத்தில், குருகிராமில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. அப்போது அந்த விளையாட்டு போட்டி பங்கேற்க வந்த 14 வயது சிறுமியை மூன்று சிறுவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வீடியோ எடுத்து மிரட்டல் :
இந்த சம்பவம் கடந்த 2022 டிசம்பர் மாதமே நடந்துள்ளது என கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட இந்த சிறுவர்கள் இந்த செயலை வீடியோ எடுத்து அதை வைரலாக்குவோம் என்று சிறுமியை மிரட்டியதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், குற்றவாளிகள் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக ஓர் இடத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியும் உள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காவல்துறை விளக்கம் :
இந்த சமபவம் தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள், தற்போது தலைமறைவாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் , அந்த நபர்கள், சம்பவத்தை வீடியோ எடுத்து அதனை இன்டர்நெட்டில் பதிவேற்றியுள்ளனர் எனவும் வாட்சாப் மூலம் அந்த சிறுமிக்கும் வீடியோ பகிரப்படவே, அந்த சிறுமியின் தந்தை காவல்துறையை அணுகியுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.