மோட்டார் சைக்கிள் பந்தய விபத்தில் 13 வயது இளம் வீரர் உயிரிழப்பு

Rider Shreyas

பெங்களூருவைச் சேர்ந்த 13 வயது மோட்டார் சைக்கிள் வீரர் கொப்பரம் ஷ்ரேயாஸ் ஹரீஷ் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு.

பெங்களூருவில் உள்ள கென்ஸ்ரி பள்ளி மாணவரான ஷ்ரேயாஸ் ஹரீஷ், தேசிய அளவில் பல பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளார் , வளர்ந்து வரும் நட்சத்திரமாக பல போட்டிகளில் வென்று சாதனைப்படைத்துள்ளார்.

சனிக்கிழமை சென்னைக்கு அருகிலுள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த (MRF MMSC FMSCI) இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப் 2023 க்கான போட்டி நடைபெற்றுள்ளது.

மூன்றாவது சுற்றில் பந்தயம் தொடங்கிய உடனேயே  டர்ன்  1 இல் இருந்து வெளியேறும் போது ஷ்ரேயாஸ் விபத்தில் சிக்கியுள்ளார். ஸ்ரேயாஸ் க்கு  தலையில் பலத்த காயம் ஏற்பட்டு,ஆம்புலன்ஸில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் அப்பொழுது அவர் மருத்துவமனை  செல்லும் வழியில்  இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோகமான  சம்பவத்தைத் தொடர்ந்து, நிகழ்வின் விளம்பரதாரர், மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டமிடப்பட்ட மீதமுள்ள பந்தயங்களை ரத்து செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்