பிஜேபி ஆளும் மாநிலத்தில் விநாயகர் சதூர்தியில் 13 வயது சிறுமி பலாத்காரம்..!!

Default Image

மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த பந்தலில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 24 வயது இளைஞர் இந்தக் கொடூரச் செயலை மேற்கொண்டுள்ளார்.

Related image

இதுகுறித்துப் பேசிய பல்கர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹேமந்த் குமார் கட்கர், ”கடந்த திங்கட்கிழமை இரவு, அகர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக 13 வயது சிறுமி, தனது தோழிகளுடன் சென்றுள்ளார். அங்கே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.

Image result for பலாத்காரம்

குற்றம் சாட்டப்பட்ட பந்தல் ஒப்பந்ததாரர் சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளார். வழிபாட்டு இடத்துக்குப் பின்னால் அழைத்துச் சென்ற அவர், சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து அந்த ஒப்பந்ததாரர் தப்பியோடி உள்ளார்.பின்னர் வீடு திரும்பிய சிறுமி, நடந்த சம்பவம் குறித்துத் தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒப்பந்ததாரர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரைக் காவல்துறை தேடி வருகிறது” என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்