12 வயது சிறுவன் மூன்று செயலிகளை உருவாக்கி கின்னஸ் சாதனை
அரியானா மாநிலத்தில் மூன்று செயலிகளை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 12வயது சிறுவன்.
அரியானா மாநிலத்தில் ஜஜ்ஜரின் ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் 8-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திகேய ஜாகர், எந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லாமல் மூன்று லேர்னிங் அப்களை உருவாக்கி, அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
12 வயது சிறுவன் கார்த்திகேயானின் தந்தை அஜித் சிங், ஒரு விவசாயி. அவர் “எனது மகனுக்கு பிற பயன்பாடுகளை உருவாக்க உதவுமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த திறமையானவன் என்று கூறினார்.
மேலும் அந்த சிறுவன் கூறுகையில், “நான் மூன்று செயலிகளை உருவாக்கினேன்- முதல் செயலி லூசண்ட் ஜி.கே. ஆன்லைனில் பொது அறிவு தொடர்பானது. இரண்டாவது செயலி கோடிங் மற்றும் கிராஃபிக் டிசைனிங் கற்பிக்கும் ராம் கார்த்திக் கற்றல் மையம். மூன்றாவது ஆப் ஸ்ரீ ராம் கார்த்திக் டிஜிட்டல் கல்வி. இப்போது, இந்த ஆப்ஸ் 45,000 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது” என்று கூறினார்.
அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஒரு ட்வீட்டில், ஜஜ்ஜரைச் சேர்ந்த 12 வயது கார்த்திகேயா உலகின் இளைய ஆப் டெவலப்பராக கின்னஸ் புத்தகதில் இடம்பிடித்ததை குறித்து, “ஹரியானா இளைஞர்கள் தொழில்நுட்பத்திலும் உலகளவில் பிரகாசிக்கிறார்கள்,” என்று கூறினார்.