உலகின் உயரமான 14 மலைகளில் எட்டு நேபாளத்தில் உள்ளன. அதில், இமயமலைச் சிகரங்களை ஏறுவதும் அவற்றின் அடிவாரத்தில் நடைபயணம் மேற்கொள்வதும் பிரபலமான சாகச விளையாட்டுகளாகும்.
அந்த வகையில், வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த மலையேறும் வீரர் ஒருவர் உலகின் 10வது உயரமான சிகரமான அன்னபூர்ணா உச்சியில் இருந்து இறங்கும் போது, உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு முன் பத்து முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய அயர்லாந்தைச் சேர்ந்த நோயல் ஹன்னா என்பவர், நேற்று 8,091 மீட்டர் (26,545 அடி) சிகரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தார். இருப்பினும், அவர் சிகரத்திலிருந்து இறங்கிய போது, உயிரிழந்ததாக மலை ஏறும் வீரர்களை கணித்து வரும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் அதே மலையில் ஒரு இந்திய ஏறுபவர் காணவில்லை என்றும் தெரிவித்துள்னர். இது குறித்து, சுற்றுலாத் துறையின் அதிகாரி யுபராஜ் காதிவாடா கூறுகையில், அன்னபூர்ணாவின் கீழ் பகுதியில் ஒரு பிளவில் இந்திய மலை ஏறும் வீரர் விழுந்து நேற்று முதல் காணவில்லை என்று கூறினார்.
இதற்கிடையில், அன்னபூர்ணா மலையில் ஏறிக் கொண்டிருந்த மேலும் இரண்டு இந்திய மலையேறுபவர்கள் மோசமான வானிலையில் சிக்கி மீட்கப்பட்டதாக ஹைக்கிங் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், குறைந்தபட்சம் 365 பேர் அன்னபூர்ணாவில் ஏறியுள்ளனர், அதில் 72 க்கும் மேற்பட்டோர் மலையின் பனிச்சரிவில் சிக்கி இறந்துள்ளதாக தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…