10 முறை வெற்றிகரமாக எவரெஸ்ட் ஏறிய நபருக்கு அன்னபூர்ணா சிகரத்தில் நடந்த விபரீதம்.!

Default Image

உலகின் உயரமான 14 மலைகளில் எட்டு நேபாளத்தில் உள்ளன. அதில், இமயமலைச் சிகரங்களை ஏறுவதும் அவற்றின் அடிவாரத்தில் நடைபயணம் மேற்கொள்வதும் பிரபலமான சாகச விளையாட்டுகளாகும்.

அந்த வகையில், வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த மலையேறும் வீரர் ஒருவர் உலகின் 10வது உயரமான சிகரமான அன்னபூர்ணா உச்சியில் இருந்து இறங்கும் போது, உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு முன் பத்து முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய அயர்லாந்தைச் சேர்ந்த நோயல் ஹன்னா என்பவர், நேற்று 8,091 மீட்டர் (26,545 அடி) சிகரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தார். இருப்பினும், அவர் சிகரத்திலிருந்து இறங்கிய போது, உயிரிழந்ததாக மலை ஏறும் வீரர்களை கணித்து வரும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்கள் அதே மலையில் ஒரு இந்திய ஏறுபவர் காணவில்லை என்றும் தெரிவித்துள்னர். இது குறித்து, சுற்றுலாத் துறையின் அதிகாரி யுபராஜ் காதிவாடா கூறுகையில், அன்னபூர்ணாவின் கீழ் பகுதியில் ஒரு பிளவில் இந்திய மலை ஏறும்  வீரர் விழுந்து நேற்று முதல் காணவில்லை என்று கூறினார்.

இதற்கிடையில், அன்னபூர்ணா மலையில் ஏறிக் கொண்டிருந்த மேலும் இரண்டு இந்திய மலையேறுபவர்கள் மோசமான வானிலையில் சிக்கி மீட்கப்பட்டதாக ஹைக்கிங் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், குறைந்தபட்சம் 365 பேர் அன்னபூர்ணாவில் ஏறியுள்ளனர், அதில் 72 க்கும் மேற்பட்டோர் மலையின் பனிச்சரிவில் சிக்கி இறந்துள்ளதாக தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்