அடுத்த 40 நாட்கள் முக்கியமானவை,ஜனவரி நடுப்பகுதியில் இந்தியாவில் கொரோனா அதிகரிக்கும்-சுகாதாரத்துறை
உலகளாவிய கொரோனாவின் பரவல் குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன, ஜனவரி நடுப்பகுதியில் இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி ANI தெரிவித்துள்ளது.
இது கடந்த காலங்களில் இந்தியாவில் கோவிட் பரவலின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனா மற்றும் பிற பல நாடுகளில் கொரோனா கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மற்றொரு அலைக்கு பயந்து சுகாதார வசதிகளின் செயல்பாட்டுத் தயார்நிலையை மதிப்பாய்வு செய்து வருகின்றன.