புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் 99 வயது பாட்டி.. வைரலாகும் வீடியோ!

Default Image

புலம்பெயர் தொழிலார்கள் பலரும் தங்களின் சொந்த ஊருக்கு நடந்தே செல்வதால், பசியால் வாடும் அவர்களுக்கு 99 வயது உணவுப்பொருட்கள் தயாரித்து வருகிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டிருந்தது. இதனால் பல புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்துக்கு வசதி இல்லாததால் நடந்தே செல்கின்றனர்.

பசியால் வாடும் அவர்களுக்கு சமுக ஆர்வலர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞனார இப்ராஹிம், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “தனது 99 வயது பாட்டி மும்பையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பார்சல் தயாரிக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, அந்த பாட்டி உணவு செய்யும் விடியோவையும் அவர் பதிவிட்டார். அதில் அந்த பாட்டி, சப்பாத்தியை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புட்டலங்களில் கட்டிக்கொண்டிருந்தார். தற்பொழுது அந்த வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி பாட்டியின் செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்