ஷ்ராமிக் ரயில்களில் பயணித்த 97 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு.!
ஊரடங்கு காலத்தில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணம் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை 97 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கத் தொடங்கியதிலிருந்து க நிகழ்ந்த மொத்த மரணங்கள் குறித்த விவரங்கள் குறித்து நேற்று மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது . இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில் , “ ஸ்ராமிக் சிறப்பு ரயில்கள் பயணித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் 97 மரணங்களில் 87 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுவரை, 51 நபர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் அந்தந்த மாநில காவல்துறையினரிடமிருந்து பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மே 1 முதல் இயக்கத் தொடங்கின. மொத்தத்தில், 4,621 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மே 1 முதல் ஆகஸ்ட் 31 வரை இயக்கப்பட்டுள்ளன, 6,319,000 பயணிகளை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றன என்று ரயில்வே அமைச்சகம் சார்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், பயணத்தின் போது உணவு மற்றும் நீர் கிடைக்காதது குறித்து 4,621 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணித்தவர்களிடமிருந்து மொத்தம் 113 புகார்கள் வந்துள்ளன என்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். மேலும், கடந்த மே 1 முதல் ஆகஸ்ட் 31 வரை ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க மாநில அரசுகளிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் சுமார் ரூ 433 கோடி என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.