வாயில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 951 கிராம் தங்கம் பறிமுதல் – இருவர் கைது!
டெல்லி விமான நிலையத்தில் வாயில் 951 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
துபாயிலிருந்து வந்த உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த இருவர் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரது வாய்களிலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் இவர்களிடமிருந்து ஒரு உலோக சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கூறியுள்ள காவலர்கள், இவர்களது வாய் குழிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் 951 கிராம் எடை இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இது போல இருவர் மஸ்கட்டில் 1801 கிராம் தங்கத்தை ஜீன்ஸில் பூசி தங்கம் கடத்தி கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.