ரூ.35,000 வரை மாத சம்பளம்.! 926 காலி பணியிடங்கள்.! பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு.! மேலும் விவரங்கள் கீழே.!

Default Image
  • இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 926 உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • மாதம் சம்பளம் ரூ.13,150 – ரூ.34990 வரை, கல்வித்​ தகுதி குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்கம் வேண்டும்.

இந்த காலகட்டத்தில் படித்துவிட்டு வேளையில் இருப்பவர்களை விட வீட்டில் இருப்பவர்கள் தான் அதிகம், இந்தியாவில் வேலையின்மை காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது படித்து முடித்த மாணவர்கள், இளைஞர்களுக்கு அரசாங்க வேளையில் ஒரு ஆசை இருக்கிறது. அந்த வகையில், வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 926 உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு தகுதியான இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வங்கி பணிக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திகொண்டு கீழே உள்ள முறைப்படி விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

மொத்த காலியிடங்கள் மற்றும் வேலை : 926 உதவியாளர் பணியிடங்கள்

மாதம் சம்பளம் : ரூ.13,150 – ரூ.34990 வரை

கல்வித்​ தகுதி : குறைந்தபட்சம் 50%  மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம்                                            பெற்றிருக்கம் வேண்டும்.

வயது வரம்பு : 01.12.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 20 – 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாநகரங்கள் வாரியான காலியிடங்கள் விவரம் : சென்னை- 67, அகமதாபாத்- 19, பெங்களூரு- 21,போபால்- 42, புவனேஸ்வர்- 28, சண்டிகர்- 35, கவுகாத்தி- 55, ஹைதராபாத்- 25, ஜெய்ப்பூர்- 37, ஜம்மூ-13, கான்பூர் மற்றும் லக்னோ- 63, கொல்கத்தா- 11, மும்பை- 419, நாக்பூர்-13, புதுதில்லி- 34, பாட்னா- 24, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி- 20 போன்ற இடங்களில் மொத்தம் 926 காலியிடங்கள் உள்ளன.

தேர்வு செய்யப்படும் முறை : முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு, மொழித்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450 மற்ற பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். மாணவர்கள் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : https://opportunities.rbi.org.in/ என்ற லிங்க்யை க்ளிக் செய்து பிறகு இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து விண்ணப்பிக்கும் மாணவர்கள் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிந்துகொள்ள : https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTRPS231220191CA99C7B271B4474ABB2A6813C5B3850.PDF என்ற லிங்க்யை க்ளிக் செய்து மேலும் விபரங்களை தெரிந்துகொள்ளவும். பின்னர் அன்பான வேண்டுகோள் அனைத்து பட்டதாரி மற்றும் இளைஞர்கள் விரைவாக விண்ணப்பித்து அவர்களது கனவை நினைவாக்குங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
Omar Abdullah About Pahalgam Attack
selvaperunthagai
NCERT - 7th grade
Vanathi Srinivasan - mk stalin
BBC coverage of Kashmir attack
Tamilnadu CM MK Stalin