ஹெச்.டி.எப்.சி. வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சங்வி திடீரென காணாமல் போயிருக்கிறார்.
ஹெச்.டி.எப்.சி. வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சங்வி மும்பை மலபார் ஹில் பகுதியில் வசிக்கிறார். மனைவி மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்த அவர் புதன்கிழமை அலுவலகம் சென்ற பின் வீடு திரும்பவில்லை.அவரை மொபைல் மூலம் தொடர்புகொள்ள முயன்றபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதன் பேரில் மும்பை போலீசார் கமலா மில் வளாகத்தில் உள்ள ஹெச்.டி.எப்.சி. வங்கி அலுவலகத்தில் விசாரித்துள்ளானர். சித்தார்த் கிரண் சங்வி புதன்கிழமை இரவு சுமார் ஏழரை மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பியதாகத் தெரிந்துள்ளது. ஆனால், சிசிடிவி கேமரா பதிவுகளை சோதித்தபோது, அவரது கார் அலுவலகத்திலிருந்து சென்ற காட்சி ஏதும் இல்லை.
இதனிடையே வெள்ளிக்கிழமை மாலை ஐரோலி பகுதியில் ரத்தக் கறையுடன் சித்தார்த் கிரண் சங்வியின் மாருதி இக்னிஸ் காரை போலீசார் கண்டுள்ளனர். சங்வி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடர்கின்றனர்.இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…