“தலைவரை காணோம் ” கடத்தலாக இருக்குமோ என்று போலீஸ் விசாரணை..!!

Default Image

ஹெச்.டி.எப்.சி. வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சங்வி திடீரென காணாமல் போயிருக்கிறார்.

ஹெச்.டி.எப்.சி. வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சங்வி மும்பை மலபார் ஹில் பகுதியில் வசிக்கிறார். மனைவி மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்த அவர் புதன்கிழமை அலுவலகம் சென்ற பின் வீடு திரும்பவில்லை.அவரை மொபைல் மூலம் தொடர்புகொள்ள முயன்றபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.


இதன் பேரில் மும்பை போலீசார் கமலா மில் வளாகத்தில் உள்ள ஹெச்.டி.எப்.சி. வங்கி அலுவலகத்தில் விசாரித்துள்ளானர். சித்தார்த் கிரண் சங்வி புதன்கிழமை இரவு சுமார் ஏழரை மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பியதாகத் தெரிந்துள்ளது. ஆனால், சிசிடிவி கேமரா பதிவுகளை சோதித்தபோது, அவரது கார் அலுவலகத்திலிருந்து சென்ற காட்சி ஏதும் இல்லை.
இதனிடையே வெள்ளிக்கிழமை மாலை ஐரோலி பகுதியில் ரத்தக் கறையுடன் சித்தார்த் கிரண் சங்வியின் மாருதி இக்னிஸ் காரை போலீசார் கண்டுள்ளனர். சங்வி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடர்கின்றனர்.இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்