தமிழகத்திற்கு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 907.75 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், கொரோனா தடுப்பு மருதத்துவ உபகரணங்களை வாங்க 3,000 கோடி தேவைப்படுகிறது.
கொரோனாவை தடுக்கவும், பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் 9,000 கோடி சிறப்பு நிதி தேவைப்படுகிறது. 2020-2021 -ம் ஆண்டு நிதிக்குழு மானியத்தில் 50 சதவீதத்தை ஊரக உள்ளாட்சிகளுக்கு விடுவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்நிலையில், 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி, 26 மாநிலங்களுக்கு முதல் தவணையாக 15,187.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்திற்கு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 907.75 கோடியும், அதிகபட்சமாக உ.பி-க்கு 2,438 கோடியும், மகாராஷ்டிராவுக்கு 1,456.75 கோடியும், பீகாருக்கு 1,254.50 கோடியும், மேற்கு வங்கத்திற்கு 1,103 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…