லண்டனில் இருந்து நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை கேட்ட விஜய் மல்லையாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய வங்கிகள் பலவற்றில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பை டிசம்பர் 10 ஆம் தேதி நீதிமன்றம் வழங்கியது.
இதன் பின்னர் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு விஜய் மல்லையாவை அனுப்ப பிரிட்டன் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
பின் வங்கி கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா தப்பி ஓடிய குற்றவாளி என டெல்லி பொருளாதார சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. பொருளாதார குற்றவாளி என்பதால், மல்லையாவின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது.அதேபோல் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் விஜய் மல்லையா.ஆனால் லண்டனில் இருந்து நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை கேட்ட விஜய் மல்லையாவின் கோரிக்கை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருத்தலம் அமைந்துள்ள…