மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 9 வயது சிறுமி! அறுவை சிகிச்சையின் போது சிறுமி என்ன செய்துள்ளார் தெரியுமா?
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த 9 வயது சிறுமி சௌமியா, மூளை அறுவை சிகிச்சையின் போது, 6 மணி நேரம் பியானோ வாசித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த 9 வயது சிறுமி சௌமியா, மூளை அறுவை சிகிச்சைக்காக, பிர்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது மூளையில் உள்ள ஒரு கட்டியை அகற்றுவதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் அறுவை சிகிச்சைக்குப்பின் தான் நலமுடன் உள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் குறைந்தது 6 மணி நேரம் பியானோ வாசித்தேன். மொபைல் விளையாடினேன். இப்பொழுது நன்றாக உணர்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
இவரது அறுவை சிகிச்சை குறித்து, மருத்துவர்கள் கூறுகையில், மூளையின் மற்ற நரம்புகளுக்குச் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அவருக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்வது கடினம் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே அவரது அறுவை சிகிச்சை ‘Awake Craniotomy’ முறையில் செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சைக்கு பின் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர் அபிஷேக் சவுகான் கூறுகையில், இந்த அறுவை சிகிச்சை சவாலானது தான். ஆனால் எங்கள் அணியின் முயற்சியால், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. நாங்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது, நாங்கள் அவளிடம் பியானோ வாசிக்கச் சொன்னோம். அறுவை சிகிச்சை முடியும் வரை அவள் சுயநினைவுடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.